UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 09:48 PM
அ நிறம் | அளவு
''வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால், மழைநீர் வடிகால் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். கூவம், அடையாறு, பகிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட ஆறுகள், ஏரிகளில் ஆகாயதாமரை, வண்டல் மண்ணை அகற்ற வேண்டும்.
மின்சாரம் பாய்ந்து எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்காத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
சென்னையில் இதுவரை, 5,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட பதிவு செய்துள்ளனர். இவர்களது சேவையை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்.
- ககன்தீப் சிங் பேடி,
செயலர், நகராட்சி நிர்வாகத்துறை.
