/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழையால் சேதமான 5,000 இடங்களில் சாலை ஒட்டு பணி துவக்கம்: மேயர்
/
மழையால் சேதமான 5,000 இடங்களில் சாலை ஒட்டு பணி துவக்கம்: மேயர்
மழையால் சேதமான 5,000 இடங்களில் சாலை ஒட்டு பணி துவக்கம்: மேயர்
மழையால் சேதமான 5,000 இடங்களில் சாலை ஒட்டு பணி துவக்கம்: மேயர்
ADDED : ஜன 03, 2025 12:16 AM
சென்னை, சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா, கொளத்துார், அம்பத்துார், துறைமுகம் மற்றும் எழும்பூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் வார்டு வாரியாக, பொதுமக்கள் தேவைகள் மற்றும் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளார்.
இதற்கான நிகழ்வை, அயனாவரத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று துவங்கி வைத்தார்.
அப்போது, மேயர் ப்ரியா அளித்த பேட்டி:
சென்னை மாநகராட்சியில் 10 ஆண்டுகளாக வரி போடப்படவில்லை. 2022ம் ஆண்டு தான் சொத்து வரியை குறைவாக உயர்த்தினோம். கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களைவிட தமிழகத்தில், வரி குறைவாகத்தான் வசூலிக்கப்படுகிறது.
மத்திய அரசு தரக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான், அரசு சார்பில் மிகக்குறைவாக வரி வசூலிக்கப்படுகிறது. சாலைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு சாலைகள் போடப்படுகின்றன.
நவ., - டிச., மாதம் பெய்யும் மழையால், சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிடுகின்றன. தற்போது மழை பெய்வது நின்றுள்ளதால், மாநகராட்சி சார்பில் 5,000 பகுதிகள் கண்டறியப்பட்டு மூன்று பகுதிகளில், 'பேட்ச் ஒர்க்' செய்யும் பணி துவங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

