/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி மருத்துவமனையில் 5,020 அறுவை சிகிச்சை
/
கிண்டி மருத்துவமனையில் 5,020 அறுவை சிகிச்சை
ADDED : டிச 13, 2024 12:18 AM
சென்னை, சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், பல்வேறு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, சிகிச்சை பெறும் நோயாளிகளை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
இந்த மருத்துவமனை, 2023 ஜூன் 15ல் திறக்கப்பட்டு, 18 மாதங்களில், 5,020 அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, 538 நரம்பியல்; 1,375 சிறுநீரகம்; 512 பொது; 1,000த்திற்கு மேற்பட்ட புற்றுநோய்; 137 இதய பைபாஸ் மற்றும் இதய வால்வு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த, 10 மாதங்களில் மட்டும் இதயவியல் துறையில், 1,683 பேருக்கு ஆஞ்சியோகிராம், ஸ்டென்ட் மற்றும் பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சைகள் நடந்து, குறுகிய காலத்தில் இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்த, டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

