/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில ஹாக்கி லீக் போட்டி 520 பள்ளி அணி பங்கேற்பு
/
மாநில ஹாக்கி லீக் போட்டி 520 பள்ளி அணி பங்கேற்பு
ADDED : ஜூலை 20, 2025 11:42 PM
சென்னை:மாநில அளவிலான ஹாக்கி போட்டியில், 520 பள்ளி அணிகள் பங்கேற்க உள்ளன.
ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு ஆதரவுடன் மாநில அளவிலான டி.எஸ்.ஹெச்.எல்., எனும் 'தமிழ்நாடு ஸ்கூல் ஹாக்கி லீக்' போட்டி, வரும் 26ம் தேதி 38 மாவட்ட மைதானங்களில் துவங்க உள்ளன. இதில், மாநிலத்தின் 520 பள்ளி அணிகளில் 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். போட்டி 'லீக்' முறையில் நடத்தப்பட உள்ளது.
முதலில் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெறும். அதில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் மோத உள்ளன.
இது போன்ற போட்டி நடத்தப்படுவது, நாட்டிலே இதுவே முதல் முறை. இதில், சென்னை மாவட்ட பள்ளி அணிகளுக்கான போட்டி, வரும் 26ம் தேதி அடையாறு, கோட்டூர்புரம் ஹாக்கி மைதானத்தில் நடக்க உள்ளது.