/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை போலீசுக்கு 53 புதிய வாகனங்கள்
/
சென்னை போலீசுக்கு 53 புதிய வாகனங்கள்
ADDED : ஜன 23, 2024 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை பெருநகர போலீசார் பயன்பாட்டிற்காக, 6.50 கோடி ரூபாயில், 25 ஹூண்டாய் கிரெட்டா கார்கள், எட்டு இன்னோவா கிறிஸ்டா கார்கள், 20 பொலிரோ ஜீப்புகள் வாங்கப்பட்டுள்ளன.
இவற்றை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்வாகனங்கள், போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், சட்டம் -ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

