/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
59 வயது போலீசாருக்கு இரவு பணியில் விலக்கு
/
59 வயது போலீசாருக்கு இரவு பணியில் விலக்கு
ADDED : ஜன 26, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை காவல்துறையில், 59 வயதை நிரம்பியவர்களுக்கு, இரவு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு, போலீஸ் கமிஷனர் அருண் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஓராண்டு காலத்திற்குள் பணி ஓய்வு பெறவுள்ள, 59 வயது நிரம்பிய போலீசார் அனைவருக்கும், வயது மூப்பு, பணிக்காலத்தில் அவர்களின் அர்ப்பணிப்பையும் கருத்தில் கொண்டு, இரவு பணிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. போலீசார் முதல் சிறப்பு எஸ்.ஐ., வரையிலான அனைவருக்கும், இதில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை வரும் காலங்களிலும் தொடரும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

