/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
6 விரைவு ரயில்கள் இயக்குவது நீட்டிப்பு
/
6 விரைவு ரயில்கள் இயக்குவது நீட்டிப்பு
ADDED : ஜன 21, 2026 05:59 AM
சென்னை: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால், நாகர்கோவில் - தாம்பரம் உட்பட ஆறு விரைவு ரயில்கள், கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சில விரைவு ரயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
அங்கு நடைமேடை, மேற்கூரை பணிகள் இன்னும் முடியாததால், நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும் ஆறு விரைவு ரயில்களும், கன்னியாகுமரியில் இருந்து இயக்குவது நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தாம்பரம் - நாகர்கோவில், நாகர்கோவில் - தாம்பரம், கர்நாடகா மாநிலம், மங்களூர் சென்ட்ரல் - நாகர்கோவில், நாகர்கோவில் - மங்களூர் சென்ட்ரல், சென்ட்ரல் - நாகர்கோவில், நாகர்கோவில் - சென்ட்ரல், நாகர்கோவில் - திருநெல்வேலி - திருநெல்வேலி - நாகர்கோவில், புனலுார் - நாகர்கோவில் ஆகிய ரயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

