ADDED : டிச 05, 2025 06:44 AM
ஆவடி: ஆவடி போலீஸ் கமிஷன ர கத்தில் பணியாற்றிய ஆறு இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டனர். 11 எஸ்.ஐ.,க்களுக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதில், அமீர் அலி ஜின்னா சாத்தாங்காடு சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், சடையாண்டி மவுலிவாக்கம் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அசோக், அகிலன் ராஜ் ஆகியோர் சைபர் கிரைம் பிரிவில் இன்ஸ்பெக்டர்களாகவும், தமிழ் அன்பன் மத்திய குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, குற்றவியல் பதிவு பணியகத்தின் இன்ஸ்பெக்டராக இருந்த மகிந்தா அன்னா கிறிஸ்டி காட்டூர் குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராகவும், சாத்தாங்காடு சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த ராஜிவ், பூந்தமல்லி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், சோழவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்ட ராக இருந்த ராஜகுமார், ஆவடி மக்கள் தொடர்பு இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தவிர, மத்திய குற்றப் பிரிவில் இன்ஸ்பெக்டராக இருந்த ரேகா குற்றவியல் பதிவு பணியகத்தின் இன்ஸ்பெக்டராகவும், மத்திய குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக இருந்த மகாலட்சுமி சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், மவுலிவாக்கம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த லாரன்ஸ் நுண்ணறிவு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்ஸ்., ஆன ௨௦ ஏட்டுகள் மேலும், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்து, ஏட்டுவாக பணிபுரிந்த 20 பேருக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

