/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிலம் விற்பதாக பண மோசடி தாய், மகன் உட்பட 6 பேருக்கு சிறை
/
நிலம் விற்பதாக பண மோசடி தாய், மகன் உட்பட 6 பேருக்கு சிறை
நிலம் விற்பதாக பண மோசடி தாய், மகன் உட்பட 6 பேருக்கு சிறை
நிலம் விற்பதாக பண மோசடி தாய், மகன் உட்பட 6 பேருக்கு சிறை
ADDED : நவ 22, 2024 12:36 AM
சென்னை, மாதவரத்தைச் சேர்ந்த தேவகி, மகன் துரைவேல் மற்றும் செல்வம் உள்ளிட்ட ஏழு பேர், தங்களுக்கு சொந்தமான, 36 சென்ட் நிலத்தை, 2008ல், புரசைவாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் விற்பதாக, 20 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கி மோசடி செய்துள்ளனர்.
ஆனால், இதே நிலத்தை வேறு இருவருக்கும் விற்பதாக கூறி, முன்பணமாக, 25 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர். அதேபோல மற்றொரு நபரிடம் அடமானம் வைப்பதாக, 2 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர்.
இதுகுறித்து கோவிந்தராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து, துரைவேல் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர். மேலும், இந்த மோசடி தொடர்பான வழக்கு விசாரணை, எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் தகுந்த சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஏழு பேரில் செல்வம் என்பவர் இறந்துவிட்டதால் மற்ற ஆறு பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா, 4,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.