/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காட்டாங்கொளத்துார் - தாம்பரம் இடையே வரும் 6ம் தேதி 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்

ADDED : அக் 04, 2025 02:37 AM
சென்னை,
பயணியர் நெரிசலை கருத்தில் கொண்டு, காட்டாங்கொளத்துார் - தாம்பரம் இடையே வரும் 6ம் தேதி ஆறு மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை ரயில் கோட்டம் அறிக்கை;
ஆயுதபூஜை பண்டிகையொட்டி, பயணியர் நெரிசலை கருத்தில் கொண்டு, காட்டாங்கொளத்துார் - தாம்பரம் இடையே வரும் 6ம் தேதி கூடுதல் பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
காட்டாங்கொளத்துாரில் இருந்து வரும் 6ம் தேதி அதிகாலை 4:00, 4:30, 5:00, 5:35, 6:25 மணிக்கு புறப்படும் மின்சார சிறப்பு ரயில்கள் தாம்பரம் செல்லும்
தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 6:10 மணிக்கு காட்டாங்கொளத்துார் செல்லும். இந்த சிறப்பு ரயில்கள், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், பெருங்களத்துாரில் நின்று செல்லும்.
ஒரு பகுதி ரத்து முண்டியம்பாக்கம் யார்டில் இன்று முதல் 7ம் தேதி வரை ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மேற்கண்ட நாட்களில் மாற்றம் செய்யப் பட்டுள்ளன
தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி ரயில் திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும்
விழுப்புரம் - கடற்கரை மதியம் 1:40 மணி ரயில் திண்டிவனத்தில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.