/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சிசிடிவி' கேமராக்கள் உடைத்த ரவுடிகள் கைது
/
'சிசிடிவி' கேமராக்கள் உடைத்த ரவுடிகள் கைது
ADDED : அக் 04, 2025 02:35 AM
கொடுங்கையூர், போதையில், பொது மக்களை அச்சுறுத்தி 'சிசிடிவி' கேமராக்களை உடைத்த ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
கொடுங்கையூர், மூலக்கடை சந்திப்பு அருகில், மதுபோதையில் மர்ம நபர்கள் பொதுமக்களிடம் வீண் தகராறு செய்து அச்சுறுத்துவதாகவும், எருக்கஞ்சேரி, ஜெ.பி.தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்ததாகவும், கொடுங்கையூர் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், சிசிடிவி கேமராக்களை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டது, கொடுங்கையூர், எழில் நகரைச் சேர்ந்த பிரசாந்த், 27, எருக்கஞ்சேரி, ஜெ.பி.தெருவைச் சேர்ந்த அஜய், 20, வியாசர்பாடி, பெரியார் நகரைச் சேர்ந்த வசந்த், 21 என்பது தெரிய வந்தது. ரவுடிகளாக வலம் வந்த இவர்கள் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளன.
அவர்களிடம் இருந்து 50 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.