/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5வது டிவிஷன் கிரிக்கெட் பி.எஸ்.என்.எல்., அணி வெற்றி
/
5வது டிவிஷன் கிரிக்கெட் பி.எஸ்.என்.எல்., அணி வெற்றி
5வது டிவிஷன் கிரிக்கெட் பி.எஸ்.என்.எல்., அணி வெற்றி
5வது டிவிஷன் கிரிக்கெட் பி.எஸ்.என்.எல்., அணி வெற்றி
ADDED : அக் 04, 2025 02:24 AM
சென்னை,
தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்களுக்கான ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி, சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகிறது.
சுமங்கலி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், பி.எஸ்.என்.எல்., சென்னை அணி, சிவாஜி கிளப் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சிவாஜி அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 41 ஓவர்களில், 209 ரன் அடித்து ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய பி.எஸ்.என்.எல்., சென்னை அணிக்கு, அஜித் 64, முத்துகுமார் 46, பெனிட்டோ 26 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு உதவினர்.
முடிவில், பி.எஸ்.என்.எல்., சென்னை அணி 44.1 ஓவர்களில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 213 ரன் குவித்து வெற்றி பெற்றது.