/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய நீச்சல் போட்டி சென்னை ஐ.ஐ.டி., அசத்தல்
/
தேசிய நீச்சல் போட்டி சென்னை ஐ.ஐ.டி., அசத்தல்
ADDED : அக் 04, 2025 02:22 AM
சென்னை, சென்னையில் நடந்து வரும் ஐ.ஐ.டி.,க்களுக்கு இடையேயான தேசிய நீச்சல் போட்டியில், சென்னை ஐ.ஐ.டி.,யின் சங்கர்ஷன் பகதுார் ராகுல், ஆஷ்னா அஸ்வின் மத்துார், ஸ்ரீகலா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஹைதராபாத் மற்றும் திருப்பதி ஐ.ஐ.டி.,க்களுடன் இணைந்து, சென்னை ஐ.ஐ.டி., அனைத்து ஐ.ஐ.டி.,க்களுக்கும் இடையேயான, 39வது தேசிய நீச்சல் போட்டி, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடக்கிறது.
இதன் ஆடவர் 200 மீட்டர் 'ப்ரீ ஸ்டைல்' பிரிவு போட்டியில், சென்னை ஐ.ஐ.டி.,யின் சங்கர்ஷன் பகதுார் ராகுல், போட்டி துாரத்தை 2.06.54 நிமிடங்களில் கடந்து, ஐந்து புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார்.
அதேபோல், மகளிர் 50 மீட்டர் 'பட்டர்பிளை' பிரிவு போட்டியில், சென்னை ஐ.ஐ.டி.,யின் ஆஷ்னா அஸ்வின் மத்துார், போட்டி துாரத்தை 34.89 வினாடிகளில் கடந்து, ஐந்து புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார்.
தொடர்ந்து நடந்த மகளிர் 100 மீட்டர் 'பேக் ஸ்ட்ரோக்' போட்டியில், சென்னை ஐ.ஐ.டி.,யின் ஸ்ரீகலா, போட்டி துாரத்தை 1.30.97 நிமிடங்களில் கடந்து, மூன்று புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.