/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கன்டெய்னர் லாரி மோதி கணவன் கண்முன் மனைவி பலி
/
கன்டெய்னர் லாரி மோதி கணவன் கண்முன் மனைவி பலி
ADDED : அக் 04, 2025 02:04 AM
அண்ணா நகர்,
உறவினர் இறப்புக்கு சென்ற தம்பதியின் ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதியதில், கணவன் கண்முன்னே மனைவி உடல் நசுங்கி பலியானார்.
மாதவரத்தைச் சேர்ந்தவர் யூசப்கான், 45. அவரின் மனைவி நஸ் ரீன் கான், 45. இருவரும் அதே பகுதியில் சிக்கன் பகோடா கடை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை, தாம்பரத்தில் உள்ள உறவினரின் இறப்பு நிகழ்ச்சிக்காக, இருவரும் ' ஹோண்டா ஆக்டிவா ' ஸ்கூட்ட ர ில் மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்றனர்.
அப்போது, நொளம்பூர் மேம்பாலம் அருகில், அதே வழியாக சென்ற கன்டெய்னர் லாரி, இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.
அப்போது, யூசப்கான் கண்முன்னே நஸ் ரீன் கான் மீது கன்டெய்னர் லாரி ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், நஸ் ரீன் கானின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுநரான, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சர்ஜு யாதவ், 45, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.