ADDED : ஜூன் 19, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, காட்பாடி ரயில்வே பணிமனை பராமரிப்பு பணி நடப்பதால், ஆறு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
★ திருப்பதி - காட்பாடி இரவு 7:10; காட்பாடி - திருப்பதி இரவு 9:10; கடற்கரை - திருவண்ணாமலை மாலை 6:00 மணி ரயில்களின் சேவை நாளையும், 23ம் தேதிலும் ரத்து செய்யப்படுகிறது
★ திருவண்ணாமலை - தாம்பரம் அதிகாலை 4:30 மணி ரயில் வரும் 21, 24ம் தேதியில் ரத்து செய்யப்படும்
★ அரக்கோணம் - காட்பாடி இரவு 9:00 மணி ரயில் இன்றும், 23ம் தேதியிலும், சேவூர் வரை இயக்கப்படும்
★ விழுப்புரம் - காட்பாடி இரவு 7:10 மணி ரயில் இன்றும், 23ம் தேதியிலும், வேலுார் வரை இயக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.