/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீச்சலில் மனவளர்ச்சி குன்றிய 6 வயது சிறுமி உலக சாதனை
/
நீச்சலில் மனவளர்ச்சி குன்றிய 6 வயது சிறுமி உலக சாதனை
நீச்சலில் மனவளர்ச்சி குன்றிய 6 வயது சிறுமி உலக சாதனை
நீச்சலில் மனவளர்ச்சி குன்றிய 6 வயது சிறுமி உலக சாதனை
ADDED : அக் 03, 2025 12:32 AM

சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்த உலக சாதனை நிகழ்வில், மனவளர்ச்சி குன்றிய ஆறு வயது சிறுமி உலக சாதனை படைத்துள்ளார்.
எஸ்.ஆர்.எம்., பல்கலையின் விளையாட்டு துறை சார்பில் நோபல், உலக சாதனைக்கான நிகழ்வு அந்த பல்கலையின் பாரிவேந்தர் நீர் விளையாட்டு வளாக நீச்சல் குளத்தில் நடந்தது.
இதில், அனைவரையும் பிரமிக்கவைக்கும் வகையில், மனவளர்ச்சி குன்றிய 6 வயது சிறுமி தரணி சாதனை படைத்து, 'நோபல்' உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இவர் நீர் விளையாட்டில் ஒன்றான 'போட் ஜம்ப்' பிரிவில், 10 மீட்டர் உயரத்தில் இருந்து துணிச்சலாக குதித்த முதல் சிறுமி என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இது குறித்து தரணியின் பயிற்சியாளர் வீரன் கூறுகையில், ''சிறு வயதில் இத்தகைய சாதனையை நிகழ்த்துவது, சாதாரண விஷயம் இல்லை. கடுமையான பயிற்சியும் மன உறுதியும் அதிகம் வேண்டும். அது, தரணியிடம் அதிகமாகவே உள்ளது.
' 'தரணியின் பெற்றோர் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலையின் உடற்கல்வி துறை இயக்குநர் மோகன கிருஷ்ணன், இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்தனர்,'' என்றார்.