/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மவுலிவாக்கத்தில் வீடு புகுந்து 60 சவரன், ரூ.6 லட்சம் கொள்ளை
/
மவுலிவாக்கத்தில் வீடு புகுந்து 60 சவரன், ரூ.6 லட்சம் கொள்ளை
மவுலிவாக்கத்தில் வீடு புகுந்து 60 சவரன், ரூ.6 லட்சம் கொள்ளை
மவுலிவாக்கத்தில் வீடு புகுந்து 60 சவரன், ரூ.6 லட்சம் கொள்ளை
ADDED : ஆக 29, 2025 10:22 PM
மவுலிவாக்கம், மவுலிவாக்கம் அருகே, பைனான்ஷியரின் வீட்டு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 60 சவரன் நகைகள், 6 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
குன்றத்துார் அருகே மவுலிவாக்கம் அடுத்த மதனந்தபுரம், அன்னை வேளாங்கண்ணி நகர், 11வது தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி, 61. துணி வாங்கி விற்கும் வியாபாரம் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் மகள், சொந்த ஊரான கரூர் மாவட்டத்திற்கு, சில தினங்களுக்கு முன் சென்றனர்.
ராமசாமி, வேளச்சேரியில் உள்ள சகோதரர் வீட்டில் நேற்று முன்தினம் தங்கினார். நேற்று காலை மதனந்தபுரத்தில் உள்ள தன் வீட்டிற்கு சென்றார்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பிரோவில் இருந்த 60 சவரன் நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து, ராமசாமி மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.