ADDED : ஜன 18, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோரை, போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, ஒரு வாரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 1,788 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள், இரண்டு மொபைல் போன்கள், இரண்டு இருசக்கர வாகனம், ஆட்டோ, இலகுரக வாகனம் உள்ளிட்டவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
குறிப்பாக, புழல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், கிடங்கில் பதுக்கி வைத்திருந்த, 1,511 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர்.