/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வியாசர்பாடி ரவுடி கொலையில் 7 பேர் கைது * தந்தை கொலைக்கு பழிவாங்கிய மகன்
/
வியாசர்பாடி ரவுடி கொலையில் 7 பேர் கைது * தந்தை கொலைக்கு பழிவாங்கிய மகன்
வியாசர்பாடி ரவுடி கொலையில் 7 பேர் கைது * தந்தை கொலைக்கு பழிவாங்கிய மகன்
வியாசர்பாடி ரவுடி கொலையில் 7 பேர் கைது * தந்தை கொலைக்கு பழிவாங்கிய மகன்
ADDED : ஏப் 22, 2025 12:48 AM

வியாசர்பாடி, வியாசர்பாடியில் ரவுடி தொண்டைராஜ் கொலையில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். தந்தை கொலைக்கு பழி வாங்கும் நோக்கில், மகன் தன் நண்பர்களுடன் சேர்ந்து, கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
வியாசர்பாடி உதயசூரியன் நகர், 11 வது பிளாக்கைச் சேர்ந்த ராஜ் என்ற தொண்டை ராஜ், 40; ஆட்டோ ஓட்டுநர். இவர் மீது, மூன்று கொலை உட்பட, 12 வழக்குகள் உள்ளன. இவருக்கு தீபா என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, சில மாதங்களுக்கு முன், தொண்டைராஜ், மணலி சின்னசேக்காடு பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டார்.
ஈஸ்டர் பண்டிகையொட்டி நேற்று முன்தினம் மாலை, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள தாய் வீட்டிற்கு, குடும்பத்துடன் வந்துள்ளார். மாலை, 5:00 மணிக்கு, சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலை, நான்காவது தெருவில் நடந்து சென்றபோது, மறைந்திருந்த நான்கு பேர் கும்பல், பயங்கர ஆயுதங்களால், தொண்டை ராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. ரத்த வெள்ளத்தில் சரிந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
சம்பவம் குறித்து, வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு, 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர். நேற்று முன்தினம் இரவு, வியாசர்பாடி கூட்ஸ் ஷெட் பகுதியில் பதுங்கியிருந்த நால்வரை மடக்கி பிடித்தனர்.
அப்போது தப்பியோடிய நால்வரும், தண்டவாளத்தில் தடுக்கி விழுந்து, கை - காலில் முறிவு ஏற்பட்டது. நான்கு பேரையும் பிடித்த போலீசார், சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், பிடிப்பட்டவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த சூர்யா, 27, ஸ்ரீராம், 25, அஜித் , 25, முருகன், 28 என்பது தெரிய வந்தது.
சூர்யாவின் தந்தை ராஜா, 2020 ல், வெட்டிக் கொல்லப்பட்டார். இதில், தொண்டை ராஜ் மூளையாக செயல்பட்டுள்ளார். அதற்கு பழிவாங்கவே, சூர்யா தன் நண்பர்களுடன் சேர்ந்து, திட்டமிட்டு, தொண்டை ராஜை கொலை செய்தது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து, ஐந்து கத்திகள், 'புல்லட்' உள்ளிட்ட இரண்டு டூ - வீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தொண்டை ராஜ் நடமாட்டம் குறித்து உளவு பார்த்த, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 26, அஜய்குமார், 26, பல் அஜித், 22, ஆகிய மூவரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.