/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமான நிலையத்தில் பயணியிடம் 7 தோட்டா பறிமுதல்
/
விமான நிலையத்தில் பயணியிடம் 7 தோட்டா பறிமுதல்
ADDED : அக் 28, 2025 12:41 AM
சென்னை: அந்தமான் பயணியிடம் இருந்து சிக்கிய ஏழு தோட்டாக்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், நேற்று புறப்பட்ட தயாராக இருந்தது.
அதில் பயணிக்க வந்த அந்தமானைச் சேர்ந்த பீட்டர், 52, என்ற பயணியின் உடைமைகளை 'ஸ்கேன்' செய்தபோது, அதில் வெவ்வேறு ரகத்தில், துருப்பிடித்த நிலையில் ஏழு பழைய துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பீட்டரின் பயணத்தை ரத்து செய்தனர்.
விசாரணையில், துணை ராணுவப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பீட்டர், தற்போது திருச்சியில் உள்ள ஆயுதப்படை தொழிற்சாலையில், காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது, மணலுக்குள் புதைந்து கிடந்த பயன்படுத்த முடியாத பழைய குண்டுகளை எடுத்து வைத்து, விமானத்தில் சொந்த ஊரான அந்தமானுக்கு கொண்டு சென்றதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அவரது விளக்கத்தை ஏற்றுகொள்ளாத அதிகாரிகள், அவரை, சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

