/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில் கதவில் புதிய தொழில்நுட்பம் விபத்தை தடுக்க ரூ.48 கோடிக்கு ஒப்பந்தம்

ADDED : அக் 28, 2025 12:41 AM

சென்னை: மெட்ரோ ரயில் கதவுகளில் துணிகள், பைகள் சிக்கிக் கொள்வதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் புதிய தொழில்நுட்பத்தை, 48.33 கோடி ரூபாயில் செயல்படுத்த, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனியார் நிறுவனத்துடன் நேற்று ஒப்பந்தம் மேற்கொண்டது.
மெட்ரோ ரயில் கதவுகளில் துணிகள் அல்லது பைகள் சிக்கிக் கொள்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க, 52 மெட்ரோ ரயில்களின் கதவுகளில், 'ஆண்டி டிராக் ப்யூச்சர்' எனும் புதிய தொழில்நுட்பம் கொண்ட அமைப்பை நிறுவ, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது, 10 மி.மீ., அளவிலான துணி, பெல்ட் சிக்கினால்தான் சென்சாரில் பதிவாகும். புது தொழில்நுட்பத்தில், 0.3 மி.மீ., அளவிலான எது சிக்கினாலும் சென்சார் உள்வாங்கும் என்பதால் விபத்துகள் ஏற்படாது.
இதற்காக, 48.33 கோடி ரூபாயில், 'பைவ்லி டிரான்ஸ்போர்ட் ரயில் டெக்னாலஜிஸ் இந்தியா' என்ற நிறுவனத்துடன் நேற்று ஒப்பந்தம் மேற்கொண்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் மனோஜ் கோயல் முன்னிலையில், நிறுவன தலைமை பொது மேலாளர் ராஜேந்திரன், பைவ்லி டிரான்ஸ்போர்ட் ரயில் டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவன இயக்குநர் புனீத் மெஹ்ரோத்ரா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.