/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறு - தாம்பரம் இடையே 7 புதிய பேருந்து சேவை துவக்கம்
/
அடையாறு - தாம்பரம் இடையே 7 புதிய பேருந்து சேவை துவக்கம்
அடையாறு - தாம்பரம் இடையே 7 புதிய பேருந்து சேவை துவக்கம்
அடையாறு - தாம்பரம் இடையே 7 புதிய பேருந்து சேவை துவக்கம்
ADDED : நவ 17, 2025 03:31 AM

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை, 189வது வார்டு, மாநகராட்சி அலுவலகம் அருகில், அடையாறு - தாம்பரம் மேற்கு வரை செல்லக்கூடிய தடம் எண்: 96 எனும் ஏழு புதிய பேருந்துகளின் இயக்கத்தை, நேற்று காலை 10:30 மணிக்கு, சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தாம்பரம் மேற்கு- - அடையாறு வரை செல்லக்கூடிய நேரடி பேருந்து சேவை, மேடவாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளுக்கு இல்லை. இதனால், குறிப்பிட்ட பகுதி மக்கள் அடையாறு செல்ல வேண்டுமெனில், சோழிங்கநல்லுார் சென்று, அங்கிருந்து வேறு பேருந்தில் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதனால், பொது மக்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல், பேருந்து மாறி மாறி சென்று, அலைச்சலால் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்த புகாரின்படி, தடம் எண்: 96 எனும் ஏழு புதிய பேருந்துகள், மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகின்றன.
இப்பேருந்துகள், அடையாறு பேருந்து நிலையத்தில் இருந்து, ஜெயந்தி திரையரங்கம்-, எஸ்.ஆர்.பி., டூல்ஸ், கந்தன்சாவடி, துரைப்பாக்கம், காமாட்சி மருத்துவமனை, பள்ளிக்கரணை-, மேடவாக்கம் வழியாக, தாம்பரம் மேற்கு பேருந்து நிலையத்தை அடைகிறது.
இதனால், தாம்பரம் கிழக்கிலிருந்து பள்ளிக்கரணை வரை உள்ள பகுதி மக்கள், அடையாறு செல்ல சோழிங்கநல்லுார் வழியாக செல்வது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிகழ்வில், சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், பெருங்குடி மண்டல குழு தலைவர் உட்பட அதிகாரிகள், பொது மக்கள் பங்கேற்றனர்.

