/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளைஞரை கத்தியால் வெட்டி நகை பறித்த வழக்கில் 7 பேர் கைது
/
இளைஞரை கத்தியால் வெட்டி நகை பறித்த வழக்கில் 7 பேர் கைது
இளைஞரை கத்தியால் வெட்டி நகை பறித்த வழக்கில் 7 பேர் கைது
இளைஞரை கத்தியால் வெட்டி நகை பறித்த வழக்கில் 7 பேர் கைது
ADDED : ஜூலை 30, 2025 12:35 AM
குன்றத்துார்,இன்ஸ்டாகிராமில் பைக் விற்பனை செய்வதாக பதிவிட்டு, இளைஞரை அழைத்து கத்தியால் வெட்டி பணம், நகை, மொபைல் போனை பறித்த வழக்கில், இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்தவர் வினோத், 23. இவர், வேளச்சேரியில் தங்கி வேலை தேடி வருகிறார்.
இந்நிலையில், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், பைக் விற்பனை குறித்த பதிவை பார்த்து, அதில் இருந்த மொபைல் போன் எண்ணை தொடர்புகொண்டு வினோத் பேசியுள்ளார்.
எதிர்முனையில் பேசிய நபர், பைக்கை வாங்கிக்கொள்ள, குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த புதுநல்லுார் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதையடுத்து, வினோத் நேற்று முன்தினம் புதுநல்லுார் சென்றார். அப்போது, வனப்பகுதிக்கு வினோத்தை அழைத்து சென்று, கத்தியால் லேசாக வெட்டி, அவரிடம் இருந்து ஐ-போன், ஒரு சவரன் செயின், 15,000 ரூபாயை, இரண்டு பெண்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல்
பறித்தனர்.
இதையடுத்து, அங்கிருந்து தப்பிய வினோத், சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டது, குன்றத்துார் அருகே நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த கறி செல்வம், 27, அவரது மனைவி ஸ்ரீமதி, 26, உறவினர் நாகராணி, 33, காட்டரம்பாக்கத்தை சேர்ந்த சஞ்சய், 18, தர்மா, 19, சதிஷ், 19, வேலு, 18, சர்வீன், 19, என்பது தெரிந்தது.
இந்த வழக்கில், ஸ்ரீமதி, நாகராணி, சஞ்சய் உள்ளிட்ட 7 பேரை, சோமங்கலம் போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள செல்வத்தை, போலீசார் தேடி வருகின்றனர்.

