/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டில் 'லேப்' வைத்து போதை பொருள் தயாரித்த 7 பேர் கொடுங்கையூரில் கைது தாயின் நகையை விற்று தொழில் துவங்க முயற்சி
/
வீட்டில் 'லேப்' வைத்து போதை பொருள் தயாரித்த 7 பேர் கொடுங்கையூரில் கைது தாயின் நகையை விற்று தொழில் துவங்க முயற்சி
வீட்டில் 'லேப்' வைத்து போதை பொருள் தயாரித்த 7 பேர் கொடுங்கையூரில் கைது தாயின் நகையை விற்று தொழில் துவங்க முயற்சி
வீட்டில் 'லேப்' வைத்து போதை பொருள் தயாரித்த 7 பேர் கொடுங்கையூரில் கைது தாயின் நகையை விற்று தொழில் துவங்க முயற்சி
ADDED : அக் 24, 2024 12:32 AM

கொடுங்கையூர், கொடுங்கையூர் பகுதியில், வீடு ஒன்றில் போதை பொருள் தயாரிக்கப்படுவதாக, போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு, டி.எஸ்.பி., மனோஜ்குமார், ஆய்வாளர்கள் ராஜா சிங், ஜானி செல்லப்பா ஆகியோர் தலைமையிலான போலீசார், கொடுங்கையூர், பிண்ணி நகர் பிரதான சாலையில் உள்ள, வீடு ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து, 'மெத் ஆம்பெட்டமைன்' எனும் போதை பொருள் தயாரித்து வந்தது தெரியவந்தது.
தொடர்புடைய, அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் பிரனவ், 21, மீஞ்சூர் கிஷோர், 21, ஞானபாண்டியன், 22, கோலப்பஞ்சேரி நவீன், 21, மணலி தனுஷ், 23, தேனாம்பேட்டை பிளமிங் பிரான்சிஸ், 21, செங்குன்றம் அருண்குமார், 38, ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 245 கிராம் எடையிலான, மெத் ஆம் பெட்டமைன், இரு மடிக்கணினிகள், ஏழு மொபைல் போன்கள், எடை பார்க்கும் இயந்திரம், கவர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, கொடுங்கையூர் போலீசார் கூறியதாவது:
பிரவீன், கிஷோர், நவீன் ஆகியோர் பட்டதாரிகள். அவர்கள் பயின்ற, ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் எம்.சி.ஏ., இரண்டாம் ஆண்டு மாணவர் தனுஷ்.
தனுஷ், தொழில் துவங்க போவதாக கூறி, தாயின் நகைகளை அடகு வைத்து, மூன்று லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்துள்ளார்.
பின், நால்வரும் சேர்ந்து, செங்குன்றத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரிடம், அந்த பணத்தை கொடுத்து, 250 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருளை வாங்கி உள்ளனர்.
அதை, 1 - 2 கிராம் என்ற அளவில், பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து, தேனாம்பேட்டை பிளமிங் பிரான்சிஸ், பூந்தமல்லி ஆகாஷ் உள்ளிட்டோருக்கு விற்பனை செய்துள்ளனர்.
அவர்கள், அந்த போதை பொருளை பயன்படுத்திய பின், போதை ஏறவில்லை என கூறியுள்ளனர்.
இதையடுத்து, மெத் ஆம்பெட்டமைன் போதை பொருளை சொந்தமாக தயாரிக்க திட்டமிட்ட நண்பர்கள், கிஷோரின் நண்பரான முதுகலை வேதியியல் மாணவர் ஞானபாண்டியன், 22, என்பவரிடம் யோசனை கேட்டுள்ளனர்.
அதன்படி, சவுகார்பேட்டையில் உள்ள ஒரு ரசாயன விற்பனை கடையில், வேதிப் பொருட்களை வாங்கி வந்து, பிரவீன் வீட்டில் ஆய்வகம் அமைத்து, ஞானபாண்டியன் உதவியுடன் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருளை தயாரிக்கும் சோதனை முயற்சியில், நால்வரும் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களிடம் மேற்கொண்டு விசாரித்து வருகிறோம். தலைமறைவான கார்த்திக், ஆகாஷ் ஆகியோரை தேடுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிஷோர்