/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாக்லேட் வாங்குவது போல் பெண்ணிடம் 7 சவரன் பறிப்பு
/
சாக்லேட் வாங்குவது போல் பெண்ணிடம் 7 சவரன் பறிப்பு
ADDED : செப் 27, 2024 12:54 AM

எண்ணுார், எர்ணாவூர், காந்தி நகரைச் சேர்ந்தவர் ராமசேகர். இவரது மனைவி அன்னசெல்வி, 48. இவர்கள், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, அன்னசெல்வி கடையில் வியாபாரம் செய்துக் கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் சாக்லேட் கேட்டுள்ளார். சாக்லேட் எடுப்பதற்குள், அன்னசெல்வியின் கழுத்தில் அணிந்திருந்த, 7 சவரன் செயினை பறித்து விட்டு தப்பியோடினார்.
அதிர்ச்சியடைந்த அன்னசெல்வி கூச்சலிட்டதை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் விரட்டி சென்று, ரயில்வே தண்டவாளம் அருகே மர்மநபர்களை மடக்கி பிடித்து, நையப்புடைத்து எண்ணுார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த அம்மமுத்து, 29, என்பதும், பிழைப்பு தேடி சென்னை வந்தவர், போதிய வருமானம் இல்லாததால், வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இவர் மீது, ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளது. அவரிடமிருந்து, தங்க செயினை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

