/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிப்பறை தொட்டியில் விழுந்து 7 வயது சிறுமி உயிரிழப்பு
/
கழிப்பறை தொட்டியில் விழுந்து 7 வயது சிறுமி உயிரிழப்பு
கழிப்பறை தொட்டியில் விழுந்து 7 வயது சிறுமி உயிரிழப்பு
கழிப்பறை தொட்டியில் விழுந்து 7 வயது சிறுமி உயிரிழப்பு
ADDED : செப் 12, 2025 02:46 AM
ஸ்ரீபெரும்புதுார்,
ஒரகடம் அருகே, வாரணவாசியில், கழிப்பறை தொட்டியில் விழுந்த 7 வயது சிறுமி உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே, வாரணவாசியைச் சேர்ந்த ரமேஷ் - ரேணுகா தம்பதியின் 7 வயது மகள் கனுஸ்ரீ, 8. அதே பகுதி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
பெற்றோர் நேற்று வெளியே சென்றதால் 2 வயது தங்கை ரியாஸ்ரீயை கவனித்து கொள்வதற்காக, கனுஸ்ரீ பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
வீட்டின் எதிரே கோபி என்பவர் புதிதாக கட்டிவரும் வீட்டில், இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது, படிக்கட்டு அடியில் திறந்திருந்த 10 அடி ஆழம், 10 அடி அகலம் உடைய கழிப்பறை தொட்டியில், கனுஸ்ரீ தவறி விழுந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர், கழிப்பறை தொட்டியில் விழுந்த சிறுமியை மீட்டு, பண்ருட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்ததில், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஒரகடம் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.