ADDED : ஜூன் 13, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் இருந்தனர். நடைமேடைகளில் சோதனை நடத்திய போது, 25 மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. இந்த அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவை, எழும்பூர் வழியாக ஆந்திராவுக்கு செல்ல இருந்த விரைவு ரயிலில் கடத்த முயன்ற இருந்தது தெரிய வந்தது. அரிசி கடத்தியோர் குறித்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரிக்கின்றனர்.