ADDED : ஏப் 10, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, புளியந்தோப்பு மற்றும் பேசின்பாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளான, 'கோனு' சரவணன், 22, ஹரிஷ், 21, 'மண்ட' பிரசாந்த், 24, ஆகிய மூவரை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், புளியந்தோப்பு, டிமலஸ் சாலையில், வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடுவதில் ஏற்பட்ட தகராறில், 10,000 ரூபாய் மாமூல் கேட்டு, ரபீக் என்பவரை தாக்கிய வழக்கில், ராஜேஷ், 27, மற்றும் ராமலிங்கம், 43, ஆகிய இருவரை, பேசின்பாலம் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், ஓட்டேரியில், பைக்கில் 15 கிலோ மாவா கடத்திய வழக்கில், தலைமறைவாக இருந்த பிரான்சிஸ், 45, அவரது மனைவி அமுல், 40, மற்றும் வீரா, 32, ஆகிய மூவரை, ஓட்டேரி போலீசார் கைது செய்தனர்.

