/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கண்காணிக்க 8 அதிகாரிகள் நியமனம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கண்காணிக்க 8 அதிகாரிகள் நியமனம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கண்காணிக்க 8 அதிகாரிகள் நியமனம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கண்காணிக்க 8 அதிகாரிகள் நியமனம்
ADDED : அக் 30, 2025 03:53 AM
சென்னை: சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கண்காணிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் எட்டு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.
மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான குமரகுருபரன் தலைமை வகித்தார். தி.மு.க., - காங்கிரஸ், மா.கம்யூ., - இ.கம்யூ., ஆம்ஆத்மி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேநேரம், அ.தி.மு.க., - பா.ஜ., ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, சிறப்பு திருத்தத்தை கண்காணிக்க எட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
'வீடுதோறும் கணக்கெடுக்கும் பணி நவ., 4 முதல் டிச., 4 வரை நடைபெறும். டிச., 9ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்., 7ல் வெளியிடப்படும்' என, மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
பணியை வேகப்படுத்த வேண்டும் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை வேகப்படுத்த வேண்டும். இவ்விவகாரத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மக்களை குழப்புகிறார். திருத்தம் எவ்வாறு செய்யப்படுகிறது என்று இணையதளத்தில் விரிவாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., நடத்தக்கூடிய அனைத்து கட்சி கூட்டம், டைம் பாஸ் கூட்டமாகத்தான் நடக்கும். - கராத்தே தியாகராஜன், தமிழக பா.ஜ., செயலர்
உள்நோக்கத்தோடு திருத்தம் ''பா.ஜ., உள்நோக்கத்தோடு சிறப்பு திட்டத்தை செயல்படுத்துகிறது. திருத்தத்திற்கு ஐந்து ஆண்டு காலம் அவகாசம் கொடுக்க வேண்டும். இத்திருத்தம் சிறுபான்மையினர், கிறிஸ்தவர்கள், பட்டியலின மக்களுக்கு எதிரான தாக்குதல். - நவாஸ், துணை தலைவர், காங்., வழக்கறிஞர் அணி

