/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய கேரம் சாம்பியன்ஷிப் சென்னையின் 8 பேர் தகுதி
/
தேசிய கேரம் சாம்பியன்ஷிப் சென்னையின் 8 பேர் தகுதி
ADDED : நவ 01, 2025 01:50 AM

சென்னை: தேசிய அளவிலான ஜூனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையை சேர்ந்த எட்டு வீரர் - வீராங்கனையர் தகுதி பெற்றுள்ளனர்.
அகில இந்திய கேரம் சங்கம் மற்றும் மத்திய பிரதேச கேரம் சங்கம் இணைந்து நடத்தும், இருபாலருக்குமான, 50வது கேரம் சாம்பியன்ஷிப் போட்டி, மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியாரில் இன்று துவங்குகிறது.
லீக் கம் நாக் அவுட் முறையில், ஒற்றையர் மற்றும் குழு பிரிவுகளில் போட்டிகள் நடை பெறுகின்றன.
இதில் பங்கேற்கும் தமிழக மாநில அணியில், சென்னையைச் சேர்ந்த ரேஹான், நவீத் அகமது, ஹரிணி, டெனினா, சஞ்சனா, செம்மொழி தமிழெழில், சஹானா, பார்கா நிஷா என, இரண்டு ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

