/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.டி.எஸ்., இடத்தில் விழுந்த 8 வயது சிறுவன் மீட்பு
/
ஓ.டி.எஸ்., இடத்தில் விழுந்த 8 வயது சிறுவன் மீட்பு
ADDED : ஆக 07, 2025 12:38 AM

ராயபுரம், ராயபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் ஓ.டி.எஸ்., எனும் திறந்தவெளி கட்டமைப்பில் விழுந்த சிறுவன், பத்திரமாக மீட்கப்பட்டான்.
ராயபுரம், பனைமரத் தொட்டி, திருவேங்கடம் தெரு, அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த நாகேஷின் 8 வயது மகன் தருண். சிறுவன், வீட்டு மொட்டை மாடியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினான்.
அப்போது, குடியிருப்பில் கழிவுநீர் குழாய் மற்றும் சூரியவெளிச்சம், காற்றோட்டத்திற்காக விடப்பட்டிருந்த 30 அடி ஆழ, ஓ.டி.எஸ்., எனும் திறந்தவெளி கட்டமைப்பில் பந்து விழுந்தது. பந்து விழுந்த இடத்தை பார்க்க சென்ற தருண், கால் தவறி அந்த திறந்தவெளி கட்டமைப்பில் விழுந்தான்.
தருணின் அலறலை கேட்டு வந்த பெற்றோர், ராயபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து, அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடி துாணில் கயிறு கட்டி, திறந்தவெளி கட்டமைப்பில் இறங்கி, தருணை பத்திரமாக மீட்டனர்.
தருணுக்கு காலில் காயம் ஏற்பட்டது. ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ராயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.