/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
80 வயது முதியவர் தெருநாய்கள் கடித்து பலி
/
80 வயது முதியவர் தெருநாய்கள் கடித்து பலி
ADDED : நவ 28, 2024 12:23 AM
அரும்பாக்கம், அரும்பாக்கம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 81; திருமணமாகாதவர்.
கூலி வேலை செய்து வந்த இவர், வயது மூப்பு காரணமாக உடல் நிலை பாதித்து, கடந்த சில நாட்களாக வீட்டிலேயே படுக்கையில் இருந்துள்ளார். பக்கத்து வீட்டில் வசிக்கும் ராணி, 50, என்பவர், சுப்பிரமணியனை கவனித்து வந்துள்ளார்.
முகப்பேரில் வசிக்கும் இவரது அண்ணன் லட்சுமணன், 77, அண்ணி மணிமேகலை ஆகியோர், நேற்று முன்தினம் பார்த்துவிட்டுச் சென்றுள்ளனர்.
பின், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், சுப்பிரமணியனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே, அங்கிருந்த ராணி, வெந்நீர் கொண்டுவர, தன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, அதே பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் இரண்டு வீட்டிற்குள் புகுந்து, படுக்கையில் இருந்த சுப்பிரமணியனை சரமாரியாக கடித்துக் குதறியுள்ளன.
சத்தம் கேட்டு ஓடிவந்த ராணி, நாய்களை விரட்டியுள்ளார். ஆனால், நாய்கள் கடித்ததில் முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து, படுக்கையிலேயே மயங்கி சுப்பிரமணியன் இறந்தார்.
தகவலறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார், நேற்று அதிகாலை 1:30 மணியளவில் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.