/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் சூழ்ந்து தீவான குடியிருப்பு ஆவடியில் 800 குடும்பங்கள் அவதி
/
கழிவுநீர் சூழ்ந்து தீவான குடியிருப்பு ஆவடியில் 800 குடும்பங்கள் அவதி
கழிவுநீர் சூழ்ந்து தீவான குடியிருப்பு ஆவடியில் 800 குடும்பங்கள் அவதி
கழிவுநீர் சூழ்ந்து தீவான குடியிருப்பு ஆவடியில் 800 குடும்பங்கள் அவதி
ADDED : ஜூலை 11, 2025 12:22 AM

ஆவடி, ஆவடி அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக குடியிருப்புவாசிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ஆவடி மாநகராட்சி, 48வது வார்டு, பருத்திப்பட்டு பகுதியில், 'மஹிந்திரா ஹாப்பி நெஸ்ட்' பெயரில், 1,200 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு, 12 பிளாக்குகள் உள்ளன.
இங்குள்ள, 'சி, இ, எப், ஜி, எச்' ஆகிய ஐந்து பிளாக்குகளை சுற்றிலும், வாகன நிறுத்தும் இடத்திலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி கிடப்பதாக குடியிருப்புவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து, குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
இந்த குடியிருப்பில் உள்ள 12 பிளாக்குகளில், குறிப்பிட்ட ஐந்து பிளாக்குகளில் மட்டும், இரண்டு ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி, தீவு போல் காட்சியளிக்கிறது.
இதனால், குடியிருப்பை சுற்றிலும் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. பருவ காலங்களில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. முதியோருக்கு அடிக்கடி சுவாச கோளாறு ஏற்படுகிறது.
குடியிருப்பு நிர்வாகத்தினர், பராமரிப்பு பணிகளுக்காக பணத்தை பெறுகின்றனர். ஆனால், முறையாக பராமரிப்பதில்லை. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை.
இது குறித்து குடியிருப்பு நிர்வாகிகளிடம் முறையிட்டால், மிரட்டுகின்றனர். ஆவடி மாநகராட்சி தலையிட்டு, கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.