/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோட்டையை நோக்கி பேரணி முயற்சி 800 துாய்மை பணியாளர்கள் கைது
/
கோட்டையை நோக்கி பேரணி முயற்சி 800 துாய்மை பணியாளர்கள் கைது
கோட்டையை நோக்கி பேரணி முயற்சி 800 துாய்மை பணியாளர்கள் கைது
கோட்டையை நோக்கி பேரணி முயற்சி 800 துாய்மை பணியாளர்கள் கைது
ADDED : டிச 06, 2025 05:25 AM

பிராட்வே: பழைய நிலையிலேயே, மாநகராட்சியின் கீழ் பணி வழங்க வேண்டும் என, வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளி க்க, கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற, 800 துாய்மை பணியாளர்களை, போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் துாய்மை பணியை, தனியார் நிறுவனங்களிடம் சென்னை மாநகராட்சி ஒப்படைத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணி நிரந்தரம் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி ரிப்பன் மாளிகை உள்ளிட்ட இடங்களில், அந்த மண்டலங்களில் துாய்மை பணியாளர்கள், பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தக்கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, துாய்மை பணியாளர்கள் நான்கு பேர், அம்பத்துாரில் உள்ள உ ழைப்போர் உரிமை இயக்கம் அலுவலகத்தில், 19வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதல்வரிடம் மனு அளிக்க, கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல, பிராட்வே, குறளகம் என்.எஸ்.சி., போஸ் சாலையில் நேற்று, 800 துாய்மை பணியாளர்கள் திரண் டனர்.
பேரணியாக செல்ல முயன்ற அவர்களை 300க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 15 பேருந்துகளில் ஏற்றி, ராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அவர்களை தங்கவைத்து மாலையில் விடுவித்தனர்.
சம்பள உயர்வு இந்நிலையில், சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறை சார்பில், சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில், துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 753 ரூபாய் சம்பளத்தை, நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, 761 ரூபாயா க உயர்த்தி வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், எட்டு மாதங்களுக்கான ஊதி ய வித்தியாசத் தொகையும் சேர்த்து வழங்கப்படும் என தெரிகிறது.

