/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.நகரில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
/
தி.நகரில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : டிச 06, 2025 05:26 AM

தி.நகர்: தி.நகர் நடேசன் பூங்காவை சுற்றியுள்ள, நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
கோடம்பாக்கம் மண்டலம், 133வது வார்டு வெங்கட்நாராயணா சாலையில், மாநகராட்சி நடேசன் பூங்கா அமைந்துள்ளது. இங்கு ஏராளமானோர் தினமும் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்த பூங்காவை சுற்றி, 10க்கும் மேற்பட்ட டிபன் கடை உள்ளிட்ட தள்ளு வண்டி கடைகள் இருந்தன.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி கமிஷனர், குமரகுருபரன் தி.நகரில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நடேசன் பூங்காவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து, 10க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
ஆக்கிரமிப்பை அகற்றும் பணியின் போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

