/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொங்கலுக்கு சென்னையிலிருந்து 8.15 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
/
பொங்கலுக்கு சென்னையிலிருந்து 8.15 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
பொங்கலுக்கு சென்னையிலிருந்து 8.15 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
பொங்கலுக்கு சென்னையிலிருந்து 8.15 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ADDED : ஜன 19, 2025 10:12 PM
திருச்சி,:திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, 3 லட்சம் பேர் மட்டுமே, அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு முதல் நாள் வரை, ஒரு மார்க்கத்தில் மட்டும், 3.20 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். மீண்டும் சென்னை திரும்பி செல்பவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், 5 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்வர் என, எதிர்பார்க்கிறோம்.
கடந்த ஆண்டு சென்னையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு, 6 லட்சத்து 75,000 பேர் பயணம் செய்து உள்ளனர். இந்த ஆண்டு, நான்கு நாட்களில் மட்டும், 8 லட்சத்து 15,000 பேர் பயணம் செய்து உள்ளனர். ஆம்னி மற்றும் தனியார் பஸ்களை விட அரசு பஸ்களை நம்பி, அதிமான மக்கள் வருகின்றனர். அதேபோல, முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முன்பதிவு செய்து, அரசு பஸ்களில் பயணம் செய்யலாம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.