/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில கிக் பாக்சிங் 85 வீரர்கள் பதிவு
/
மாநில கிக் பாக்சிங் 85 வீரர்கள் பதிவு
ADDED : ஏப் 03, 2025 12:32 AM

சென்னை, சென்னை மாவட்ட 'கிக் பாக்சிங்' போட்டியில் பங்கேற்க, 85 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், சென்னை மாவட்ட கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள், ஆவடியில் ஏப்., 13ல் நடக்கின்றன.
இரு பாலருக்குமான இப்போட்டிகள் 7- 9 வயது, 10 - 15 வயது மற்றும் கேடட், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் நடக்கின்றன.
இதில் பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனையருக்கான உடல் எடை தேர்வு, ஆவடியில் உள்ள தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் தலைமையகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், 55 வீரர்கள், 30 வீராங்கனையர் என மொத்தம் 85 பேர் பங்கேற்றனர். இவர்கள் புள்ளி சண்டை, கிக் லைட், லைட் காண்டாக்ட், புல் காண்டாக்ட், லோ கிக், கே 1 ஸ்டைல் மற்றும் மியூசிக்கல் நிகழ்வு ஆகிய பிரிவுகளில் மோத உள்ளனர்.
இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனையர் மே 9, 10, 11 ஆகிய தேதிகளில், மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி பல்கலையில் நடக்க உள்ள மாநில போட்டியில் பங்கேற்பர்.