/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை மண்டலத்தில் ரூ.176 கோடியில் அமைகிறது 9 துணைமின் நிலையங்கள்
/
சென்னை மண்டலத்தில் ரூ.176 கோடியில் அமைகிறது 9 துணைமின் நிலையங்கள்
சென்னை மண்டலத்தில் ரூ.176 கோடியில் அமைகிறது 9 துணைமின் நிலையங்கள்
சென்னை மண்டலத்தில் ரூ.176 கோடியில் அமைகிறது 9 துணைமின் நிலையங்கள்
ADDED : நவ 19, 2024 12:21 AM
சென்னை,
''சென்னை மண்டலத்தில், 176 கோடி ரூபாயில் ஒன்பது இடங்களில் 33/11 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்படும்.'' என, மின் துறை அமைச்சர்செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களை சேர்ந்த அனைத்து பொறியாளர்களுடன், அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று, சென்னை கோட்டூர்புரத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில், மின் வாரிய தலைவர் நந்தகுமார் மற்றும் இயக்குனர்கள் பங்கேற்றனர்.
செந்தில் பாலாஜி கூறியதாவது:
தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடை ஏற்படும் இடங்களில், சிறப்பு கவனம் செலுத்தி, அதற்கான காரணத்தை கண்டறிந்து, உடனே சரிசெய்ய வேண்டும்.
சென்னை, காஞ்சிபுரத்தில், 6,024 மின் வினியோக பெட்டிகள் தரை மட்டத்தில் இருந்து, 1 மீட்டர் உயர்த்தப்பட்டு உள்ளன. மேலும், 503 பெட்டிகளை உயர்த்தும் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்.
சென்னை மண்டலத்தில், 785 கோடி ரூபாயில், 5,433 நவீன டிரான்ஸ்பார்மர் கட்டமைப்புகள் நிறுவப்பட்டு உள்ளன. கூடுதலாக, 310 கட்டமைப்புகள், 51 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளன.
கோடை கால மின் பளுவை எதிர்கொள்ளும் வகையில், சென்னை மண்டலத்தில், 176 கோடி ரூபாயில் மாதவரம் ரேடியன்ஸ், எம்.கே.பி., நகர், பருத்திப்பட்டு, சதர்ன் அவென்யூ, சோழவரம், புதுப்பேட்டை, முண்டககண்ணியம்மன் கோவில், டேவிட்சன் தெரு, கணேஷ் நகர் ஆகிய ஒன்பது இடங்களில், 33/ 11 கி.வோ., துணைமின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மண்டலத்தில் நான்கு இடங்களில், 96 கோடி ரூபாயில், 33/ 11 கி.வோ., துணைமின் நிலையங்கள் அமைக்கப்படும்.
சென்னை மண்டலத்தில் துணைமின் நிலையங்களில், இயக்கத்தில் உள்ள 16 பவர் டிரான்ஸ்பார்மர்களின் திறன் தரம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

