/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
93 வயது 'இளைஞருக்கு' 3 தங்கம் மாஸ்டர்ஸ் தடகளத்தில் அபாரம்
/
93 வயது 'இளைஞருக்கு' 3 தங்கம் மாஸ்டர்ஸ் தடகளத்தில் அபாரம்
93 வயது 'இளைஞருக்கு' 3 தங்கம் மாஸ்டர்ஸ் தடகளத்தில் அபாரம்
93 வயது 'இளைஞருக்கு' 3 தங்கம் மாஸ்டர்ஸ் தடகளத்தில் அபாரம்
ADDED : டிச 03, 2025 05:11 AM

சென்னை: மாஸ்டர்ஸ் தடகள போட்டியில், சென்னையின் 93 வயது முதியவர் மூன்று தங்க பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார்.
சென்னை மாவட்ட தடகள சங்கம் சார்பில், சென்னை அளவிலான மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், சென்னை மாவட்ட அளவில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 30 வயது முதல் 97 வயது வரை உள்ள வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இதில் ஆடவர் '90 பிளஸ்' பிரிவில் போட்டியிட்ட, சென்னையின் 93 வயது முதியவர் ராகவன், மூன்று தங்க பதக்கங்கள் கைப் பற்றி அசத்தியுள்ளார்.
ஈட்டி எறிதல், குண்டு எறிதல், சுத்தி எறிதல் ஆகிய பிரிவுகளில் போட்டியிட்ட ராகவன், முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த தடகள போட்டியில், மூன்று பதக்கங்கள் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை யும் பெற்றுள்ளார்.
இந்த போட்டியின் முடிவில், கடந்த மாதம் நடந்த 'ஆசிய மாஸ்டர்ஸ்' போட்டியில் பங்கேற்று, 2 தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் கைப்பற்றிய தெரசா, 89, என்பவருக்கு சிறப்பு பரிசும் காசோலையும் வழங்கி கவுரவித்தனர்.

