/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புயல், மழை எதிரொலி பூக்கள் விற்பனை மந்தம்
/
புயல், மழை எதிரொலி பூக்கள் விற்பனை மந்தம்
ADDED : டிச 03, 2025 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு: கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், புயல், மழையால் கோயம்பேடு சந்தையில் பூக்கள் விற்பனை நேற்று மந்தமாக இருந்தது.
கோயம்பேடு சந்தைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, பூக்களின் விலை உயரும் என, வியாபாரிகள் எதிர் பார்த்தனர்.
ஆனால், 'டிட்வா' புயல் கனமழையால், பூக்கள் விலை பெரிதாக உயரவில்லை என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
தொடர் மழையால், எதிர்பார்த்த வியாபாரமும் நடைபெறவில்லை என, அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். நேற்று முன்தினம் ஒரு கிேலா மல்லி ௨,௪௦௦ ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று 1,800 ரூபாய்க்கு விற்பனையானது.

