/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
949 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஸ்டான்லி மருத்துவமனை டீன் தகவல்
/
949 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஸ்டான்லி மருத்துவமனை டீன் தகவல்
949 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஸ்டான்லி மருத்துவமனை டீன் தகவல்
949 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஸ்டான்லி மருத்துவமனை டீன் தகவல்
ADDED : மார் 15, 2024 12:29 AM

ராயபுரம், சிறுநீரகத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ம் தேதியன்று, 'உலக சிறுநீரக தினம்' அனுசரிக்கப்படுகிறது.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, வடசென்னை எம்.பி., கலாநிதி வீராசாமி துவக்கி வைத்தார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தையொட்டி, முன்னாய்வு பரிசோதனையையும் அவர் துவக்கி வைத்தார்.
இம்மருத்துவமனையில் சிறுநீரகத் துறையை துவக்கிய முன்னாள் பேராசிரியர் டாக்டர் முத்து ஜெயராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின், 15 ஆண்டுகளுக்கும் மேலாக நலமுடன் உள்ள பயனாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
பின், ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜி கூறியதாவது:
ஸ்டான்லி மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 1996ல் நடந்தது. இதுவரை இங்கு, 949 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 794 பயனாளர்கள், தங்கள் உறவினர்களிடம் இருந்து சிறுநீரகம் தானம் பெற்றவர்கள்.
ஸ்டான்லி மருத்துவமனையில் மாதந்தோறும் 2,000 ஹிமோடயாலிஸிஸ் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
கிளாக்கோமாவை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம், பார்வை இழப்பைத் தவிர்ப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஸ்டான்லி மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் 1,000த்துக்கும் மேற்பட்டோருக்கு கிளாக்கோமா பரிசோதனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் மருத்துவர் ஜெனட் சுகந்தா, மருத்துவக் கண்காணிப்பாளர் மகேஷ், நிலைய மருத்துவ அலுவலர் வனிதா மலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

