/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவான்மியூர் கடற்கரையில் 97 தெருநாய்களுக்கு தடுப்பூசி
/
திருவான்மியூர் கடற்கரையில் 97 தெருநாய்களுக்கு தடுப்பூசி
திருவான்மியூர் கடற்கரையில் 97 தெருநாய்களுக்கு தடுப்பூசி
திருவான்மியூர் கடற்கரையில் 97 தெருநாய்களுக்கு தடுப்பூசி
ADDED : ஏப் 02, 2025 11:44 PM

திருவான்மியூர்,
அடையார் மண்டலத்தில், பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை, வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில், தெரு நாய்கள் அதிகமாக உள்ளன.
வெயில் காலங்களில், நாய்களின் குணாதிசயங்கள் ஆக்ரோஷமாக இருக்கும். குறிப்பாக, உணவு, குடிநீர் கிடைக்காத போது, அதன் வெறி அதிகமாக இருக்கும்.
அப்போது, அருகில் யாராவது சென்றால் பாய்ந்து கடிக்கும். இதனால், அப்பகுதிவாசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட, மாநகராட்சி முடிவு செய்தது.
நேற்று, திருவான்மியூர் கடற்கரை பகுதியில் சுற்றிய, 97 நாய்களை பிடித்து தடுப்பூசி போடப்பட்டது.
கடுமையான வெயிலின் போது, தெரு நாய்களின் குணம் எப்படி இருக்கும் என தெரியாது. அதனால், அதன் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
அடுத்து, வேளச்சேரி பகுதியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படும் என, கால்நடை மருத்துவர் ஆதிரை கூறினார்.