sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஒரு தளம் கொண்ட கட்டடத்திற்கு 'லிப்ட்' அமைக்க 75 ஆண்டு மரம் வெட்டி சாய்ப்பு

/

ஒரு தளம் கொண்ட கட்டடத்திற்கு 'லிப்ட்' அமைக்க 75 ஆண்டு மரம் வெட்டி சாய்ப்பு

ஒரு தளம் கொண்ட கட்டடத்திற்கு 'லிப்ட்' அமைக்க 75 ஆண்டு மரம் வெட்டி சாய்ப்பு

ஒரு தளம் கொண்ட கட்டடத்திற்கு 'லிப்ட்' அமைக்க 75 ஆண்டு மரம் வெட்டி சாய்ப்பு

5


ADDED : ஜன 29, 2026 10:20 AM

Google News

ADDED : ஜன 29, 2026 10:20 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்: தாம்பரத்தில், ஒரு தளம் கொண்ட, பழமையான மாநகராட்சி கட்டடத்திற்கு 'லிப்ட்' வசதி அமைப்பதற்கு, 75 ஆண்டுகள் பழமையான பலா மரத்தை அடியோடு வெட்டி சாய்த்ததற்கு, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சி அலுவலகம், தாம்பரம் நகராட்சி அலுவலகம் இருந்த பழமையான கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் பின்புறம், 75 ஆண்டுகள் பழமை வாய்ந்த பலா மரம் இருந்தது.

ஒவ்வொரு ஆண்டும், இம்மரத்தில் நுாற்றுக்கணக்கான பலா பழங்கள் காய்த்து தொங்கும். இதை அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பறித்து செல்வர். பழமையான மரம் என்பதால், இதற்கு முன் இருந்த அதிகாரிகள், இம்மரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அகற்றாமல் விட்டு விட்டனர். ஜெனரேட்டர் வைக்கும் போது கூட, இம்மரத்தின் கிளைகளை மட்டுமே வெட்டினர்.

இந்நிலையில், ஒரு தளம் கொண்ட அந்த கட்டடத்திற்கு 'லிப்ட்' வசதி அமைப்பதற்காக, பல அதிகாரிகள் பாதுகாத்து வந்த, 75 ஆண்டுகள் பழமையான பலா மரத்தை அடியோடு வெட்டி சாய்த்து விட்டனர்.

தாம்பரம் மாநகராட்சிக்கு, சானடோரியம் காசநோய் மருத்துவமனை வளாகத்தில், நான்கரை ஏக்கர் நிலத்தில், 43.40 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடம், இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

இருந்தும், தற்போதுள்ள ஒரு தளம் கொண்ட பழைய கட்டடத்திற்கு, 30 லட்சம் ரூபாய் செலவில், 'லிப்ட்' வசதி எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே நேரத்தில், இதற்காக 75 ஆண்டுகள் பழமையான மரத்தை, அடையாளமே தெரியாத அளவிற்கு அடியோடு வெட்டிய செயலுக்கு, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதேபோல், விரைவில் புதிய அலுவலகம் திறக்கப்பட உள்ள நிலையில், தற்போதுள்ள கட்டடத்தின் மொட்டை மாடியில், 35 லட்சம் ரூபாய் செலவில், செயற்பொறியாளருக்கு அறை கட்டப்பட்டுள்ளதற்கும், மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

முதல் தளத்தில் உள்ள கமிஷனரை பார்க்க வரும் முதியோர், மாற்றுத் திறனாளிகள், 'லிப்ட்' வசதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனால் தான் 'லிப்ட்' அமைக்கப்படுகிறது. இதற்காக, பழமையான பலா மரத்தின் கிளைகளை மட்டும் வெட்டுவதாக தான் கூறினார். ஆனால், மரத்தை அடியோடு வெட்டியுள்ளனர். இது தொடர்பாக விசாரிக்கப்படும். - வசந்தகுமாரி, மேயர், தாம்பரம் மாநகராட்சி.







      Dinamalar
      Follow us