/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காற்றாடி பிடிக்க சென்ற சிறுவன் 2வது மாடியிலிருந்து விழுந்து பலி
/
காற்றாடி பிடிக்க சென்ற சிறுவன் 2வது மாடியிலிருந்து விழுந்து பலி
காற்றாடி பிடிக்க சென்ற சிறுவன் 2வது மாடியிலிருந்து விழுந்து பலி
காற்றாடி பிடிக்க சென்ற சிறுவன் 2வது மாடியிலிருந்து விழுந்து பலி
ADDED : ஜூன் 24, 2025 12:09 AM

ஆவடி, ஆவடி, ராமலிங்காபுரம், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 40; ஆட்டோ ஓட்டுநர். அவரது மனைவி எமிலி அம்மாள், 36. தம்பதிக்கு, மூன்று மகள்கள் மற்றும் மகன் உள்ளனர். அவரது மகன் கார்த்திக், 10, தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம், தாய் எமிலி அம்மாளுடன், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்திற்கு கார்த்திக் சென்றான். அங்கு சிறுவர்களுடன் கார்த்திக் விளையாடிக் கொண்டிருந்த போது, தென்னை மரத்தில் காற்றாடி ஒன்று சிக்கியிருப்பதை பார்த்தான்.
அதை எடுப்பதற்காக, வீட்டின் இரண்டாவது மாடிக்கு சென்ற கார்த்திக், மரத்தில் சிக்கியிருந்த காற்றாடி நுாலை பிடிக்க, தென்னை மட்டையில் கால் வைத்து ஏற முயன்றார்.
அப்போது, கிளை முறிந்து கார்த்திக் தவறி கீழே விழுந்தான். அதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அலறி துடித்த மகனை மீட்ட எமிலி அம்மாள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலை கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தான். ஆவடி போலீசார், கார்த்திக் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.