/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவன் கழுத்தில் பாய்ந்ததோட்டா துப்பாக்கி சுடும் பயிற்சியில் விபரீதம்

ADDED : ஜன 05, 2024 12:44 AM
முடிச்சூர், தாம்பரம் அடுத்த முடிச்சூர், லட்சுமி நகரில், 'செங்கல்பட்டு ரைபிள் கிளப்' என்ற பெயரில், துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்படுகிறது. பள்ளி மாணவ - மாணவியர் உட்பட ஏராளமானோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு, தனியார் பள்ளி 7ம் வகுப்பு மாணவரான மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த சித்தார்த், 13, நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக 'ஏர்கன்' அலுமினிய தோட்டா சித்தார்த்தின் வலது கழுத்தில் பாய்ந்தது.
அவரது அலறல் சத்தம் கேட்டு, தந்தை சதீஷ் பாபு மற்றும் பயிற்சி மையத்தில் இருந்தவர்கள், அவரை மீட்டு பெருங்களத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, கழுத்தில் பாய்ந்த தோட்டா அகற்றப்பட்டது. தற்போது நலமுடன் உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, தகவலறிந்த போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால், இது தொடர்பாக, எந்த புகாரும் போலீசில் அளிக்கப்படவில்லை.