/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில்பதாகை மாட வீதியில் சமாதியாக்கப்பட்ட அடி குழாய்
/
கோவில்பதாகை மாட வீதியில் சமாதியாக்கப்பட்ட அடி குழாய்
கோவில்பதாகை மாட வீதியில் சமாதியாக்கப்பட்ட அடி குழாய்
கோவில்பதாகை மாட வீதியில் சமாதியாக்கப்பட்ட அடி குழாய்
ADDED : ஆக 04, 2025 04:26 AM

ஆவடி,:கோவில்பதாகை கிழக்கு மாடவீதியில், சமாதியாக்கப்பட்ட அடி குழாயை மீட்டு சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
ஆவடி மாநகராட்சி, கோவில்பதாகை ஐந்தாவது வார்டு, கிழக்கு மாடவீதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தேவைக்காக, ஆழ்துளை அடி குழாய் அமைக்கப்பட்டது.
மழைக்காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும்போது, பகுதிமக்களுக்கு இந்த அடி குழாய் பெரிதும் உதவிகரமாக இருந்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், இங்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. அதன்பின், போதிய பராமரிப்பின்றி அடிகுழாய் பாழாகி போனது.
இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன் அங்குள்ள குடியிருப்பு ஒன்றில் விதிமீறி சாய்வு தளம் அமைத்து, அடி குழாயை சமாதியாக்கிவிட்டனர். இது, பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், விதிமீறி அமைக்கப்பட்டுள்ள சாய்வு பாதையை அகற்றி, அடிகுழாயை மீட்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.