/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காதலரிடம் அனுதாபத்திற்காக கல்லுாரி மாணவியின் நாடகம்
/
காதலரிடம் அனுதாபத்திற்காக கல்லுாரி மாணவியின் நாடகம்
காதலரிடம் அனுதாபத்திற்காக கல்லுாரி மாணவியின் நாடகம்
காதலரிடம் அனுதாபத்திற்காக கல்லுாரி மாணவியின் நாடகம்
ADDED : அக் 23, 2024 01:03 AM
ராமாபுரம், கோடம்பாக்கத்தை சேர்ந்த 17 வயது மாணவி, தேர்வு எழுதுவதற்காக கல்லுாரி சென்றார். ராமாபுரம் பாரதி சாலை, மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே, சிலர் தன்னை பிளேடால் கீறியதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மருத்துமனையில் காயத்திற்கு சிகிச்சை பெற்று மாலையில் வீடு திரும்பினார்.
பெற்றோர் அளித்த புகார் படி, கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், மர்மநபர்களை அடையாளம் காட்ட மாணவியிடம் கேட்டனர். விசாரணையில் கல்லுாரி மாணவி தனக்கு தானே, கன்னம் மற்றும் கழுத்தில் பிளேடால் லேசாக கீறியது தெரியவந்தது. கல்லுாரியில் தான் காதலித்து வரும் மாணவரிடம் அனுதாபம் ஏற்படுத்த, இவ்வாறு செய்தது தெரியவந்தது.
கல்லுாரி மாணவியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.