/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுடுகாட்டின் சுற்றுச்சுவர் இடிந்து மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி
/
சுடுகாட்டின் சுற்றுச்சுவர் இடிந்து மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி
சுடுகாட்டின் சுற்றுச்சுவர் இடிந்து மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி
சுடுகாட்டின் சுற்றுச்சுவர் இடிந்து மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி
ADDED : ஜூன் 12, 2025 12:11 AM

ராமாபுரம்,
மழைநீர் வடிகால்வாய் பணியின்போது, சுடுகாட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணபதி, 34. மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான இவர், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரம் வள்ளுவர் சாலையில், மழைநீர் வடிகால்வாய் பணிக்காக, ராமாபுரம் சுடுகாடு அருகே சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால், பள்ளத்தில் மழைநீர் தேங்கி, மண் அரிப்பு ஏற்பட்டது.
நேற்று காலை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் கணபதி ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக சுடுகாட்டின் சுற்றுசுவர் இடிந்து, கணபதி மீது விழுந்தது. உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, ராமாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.