ADDED : அக் 22, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட வழித்தடத்தில், 36 ரயில்களை வாங்க, 'அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம், ஆந்திராவில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில் இதற்கான பணிகள் துவங்கின.
இந்நிலையில், ஓட்டு னர் இல்லாமல் இயக்கப்படும் முதல் மெட்ரோ ரயில், சென்னைக்கு வந்து உள்ளது. மூன்று பெட்டிகள் கொண்ட இந்த ரயில், வரும் 26ம் தேதி, பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய மெட்ரோ பணிமனையில் இயக்கி, சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது.
பல சோதனை நடத்திய பின், தண்டவாளங்களில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.