UPDATED : அக் 14, 2026 12:26 AM
ADDED : அக் 14, 2026 12:24 AM
அ நிறம் | அளவு
வேளச்சேரி: அடையாறு மண்டலம், 176வது வார்டு, வேளச்சேரியில் 135 துாய்மை பணியாளர்கள் பணி புரிகின்றனர். இவர்கள் பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வேளச்சேரி, ஏ.ஜி.எஸ். காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், நேற்று, ேஹாட்டலில் மதிய விருந்து வழங்கப்பட்டது. நலச்சங்கத்தினர் கூறுகையில்,‘பொது சுகாதாரத்தை பேணி காப்பதில், துாய்மை பணியாளர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.
அவர்களை கவுரவிக்கும் வகையில், நன்றி விருந்து ஏற்பாடு செய்தோம்’ என்றனர்.
